Monday, November 17, 2025

Lakshmi Ksheera Samudra Raaj - Tamil & English Lyrics

 

Lakshmi Ksheera Samudra Raaj - Tamil & English Lyrics

லக்ஷ்மீம் க்ஷீர

ஸமுத்ரா ராஜ தனயாம்


லக்ஷ்மீம் க்ஷீர

ஸமுத்ரா ராஜ தனயாம்

ஸ்ரீ ரங்க தாமேச்வரீ

தாசி பூத ஸமஸ்த தேவ வனிதாம் 

லோகைக தீபாங் குராம் 

ஸ்ரீ மந் மந்த கடாக்ஷ

லப்த விபவ ப்ரமேந்திர கங்கா தராம்  

த்வாம் த்ரை லோகிய குடும்பினிம்

சரஸிஜாம்   

வந்தே முகுந்த ப்ரியாம்




Lakshmi Ksheera Samudra Raaja Tanaya
Sree Ranga Dhaameshvari
Daasi Bhootha Samasata Deva Vanithaam
Lokaika Deepankuram
Sreeman Manda Kataaksha Labdha Vibhava
Brahmendra Gangaadharam
Tvaam Trailokya Kudumbineem
Sarasijam Vande Mukunda Priyaam





ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே

விஷ்ணுபத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

Sunday, November 16, 2025

ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா - Bhuvanagiri



ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா - புவனகிரி

Sri Venkata Ramana Bagavathar 244 th Jayanthi Vaizha - Bhuvanagiri 



 ஆலயதரிசனம் அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீமாந். வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா  கொண்டாடப்பட்டது.

அன்று புவனகிரி கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜ கூடத்தில் 23.02.2025 அன்று 6.00 மாலை மணிக்கு திருமதி. விஷ்ணுபிரியா சுதர்ஸன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி  செய்யப்பட்டிருந்தது. அவருக்கு பக்க வாத்தியமாக புவனகிரி. முனைவர். திரு. G.ஸ்ரீராம் அவர்கள் வயலினும், சிதம்பரம் திரு. ராஜேஷ் அவர்கள் மிருதங்கமும் வாசித்தனர்.

ஆலயதரிசனம் ஆசிரியர் திரு. கோகுலச்சாரி அவர்கள் நிகழ்ச்சியின் முடிவிலும் தொடக்கத்திலும் வேங்கட பாகவதரை பற்றிய சிறு குறிப்பையும் அவருடைய பாடல்களை மையமாக வைத்து அன்றைய இசை நிகழ்ச்சி நடந்ததை பற்றியும் பேசினார். கலைஞர்களை திரு. பூவராக ராமானுஜதாஸரும் திரு. ராஜ்மோகன் ராமானுஜதாஸரும் கௌரவித்தனர்.

விழாவின் முடியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. புவனகிரியில், ஸ்ரீ வெங்கடரமன  பாகவதர் அவர்களின் ஜெயந்தி விழா முதல் வருடமாக, இசைவிழாவாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.









Monday, November 10, 2025

திருமாலிருஞ்சோலையும் - திருமலையாண்டன் சுவாமிகளும்....

திருமாலிருஞ்சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனத்தை முடித்து விட்டு, திருமாலையாண்டான் ஸ்வாமி தமது திருமாளிகைக்குத் திரும்புவது வழக்கம்..

... காலம் செல்லச் செல்ல, அவருக்கு முதுமையின் காரணமாகக் கண்பார்வை மங்கியது..

...அதனால்,  ஒரு கைங்கர்யபரர், 
அவருக்குத் திருவடி பந்தம் (விளக்கு) பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு செல்லுவார்.. 

அவரது பெயர் "திருவடிபிச்சை" என்கிற சுந்தர்ராஜன்.. 

...அந்தக்காலத்தில் பொதுவாகச் சோலைகளுக்குச் செல்லுகிற வழி முழுவதும் இருட்டாகத்தான் இருக்கும்..

...அதுவும், திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதியாகவே இருந்தது..

தமது கண்பார்வை மங்கியதால், 
வழி காட்டுவதற்கு, இந்தத் திருவடிபிச்சனை உதவிக்கு வைத்திருந்தார் திருமாலையாண்டான்...

...இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து, அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு, தமது திருமாளிகை செல்லத் திருமாலையாண்டான் ஆயத்தமானபோது, 

திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனைக் காணவில்லை..
(அக்காலத்தில் தமக்குக் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமாலையாண்டான், 
திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை
"சுந்தரராஜா" - என்றழைத்தார்..

...உடனே, 
கையில் திருவடி பந்தத்துடன் வந்த சுந்தரராஜன்,
"ஸ்வாமின்... 
அடியேன் வந்துள்ளேன்..." என்று சொல்லி, 
திருமாலையாண்டானுக்கு முன்னால் வழிகாட்டியபடியே சென்று, 

அவரது திருமாளிகை வந்ததும் அவரிடம்,

 "ஸ்வாமி... 
அடியேன் திரும்பிச் செல்ல நியமனம் வாங்கிக்கிறேன்..." என்று அனுமதி பெற்றுத் திரும்பினான்..

மறுநாள் அதிகாலையில் திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சனாகிற சுந்தரராஜன், திருமாலையாண்டான் திருமாளிகைக்கு வந்து, அவரை சாஷ்டாங்கமாகச் சேவித்து, 

"ஸ்வாமின்... 
அடியேன் தெரியாமல் உமக்குத் திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில், நேற்று அபச்சாரம் செய்துவிட்டேன்.. 

...தயவுகூர்ந்து அடியேனைத் தேவரீர் மன்னித்தருள வேண்டும்..." என்று கூறவும்,

திருமாலையாண்டான், 
"என்னடா சொல்கிறாய் ? 
நீ என்ன அபச்சாரம் செய்தாய்?.." என்று கேட்க,

"..ஸ்வாமி... 
நேற்று மாலை உடல் அசதியால், மாலையிலிருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன்... 

...அதனால், எப்போதும் தேவரீருக்குத் "திருவடி பந்தம்" பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு வருகிற என்னால்,  நேற்று வர முடியாமல் போயிற்று...

ஸ்வாமி.. 
தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில், விளக்கில்லாமல் எப்படி இந்தத் திருமாளிகைக்கு எழுந்தருளினீர்?.." 
..என்று சுந்தரராஜன் கேட்கவும், 

திருமாலையாண்டான்,

"..இல்லையே..
நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்குத் திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்றுப் போனாயே.." - என்று சொல்ல, 

"..ஸ்வாமி... 
அடியேன் நேற்று வரவேயில்லை!.." என்று சுந்தர்ராஜன் மறுக்க,

...அப்போதுதான், திருமாலையாண்டானுக்கு,
நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல.. சாக்ஷாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே.. என்று புரிந்தது..

....உடனே, திருமாலிருந்சோலை சென்று, 

"ப்ரபு!.. 
தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து,
இந்த அடியவனுக்கு வழி காட்டினீரா?....." 
என்று அழகரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கதறி அழுதார்..

...சுந்தர்ராஜனான அந்த அழகர், திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து, கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும்,

திருமாலையாண்டான் அந்த அழகரின் சௌலப்யத்தை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தார்..

...சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால், திருமாலையாண்டான் பரமபதித்ததும், 
அவருக்கான இறுதிக் காரியங்களை, 
அழகர் தமது பரிவாங்களைக் கொண்டு, அர்ச்சக பரிசாரக முகேன, இன்றளவும் செய்து வருகிறார்..

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் 
ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி...

அதனால்தான், அழகர் வருஷாவருஷம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய்க் குளியல் கண்டருளுகிறார்..

அழகர் வருஷத்தில் ஒரு முறை நூபுரகங்கைக்கு வருகை தருவார்..

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான, திருமாலையாண்டான் பரமபதித்த நாள்..

கலியுகத்தில் பகவான் மனுஷ ரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது!..

எனவே, அபிமானிகளே!.. ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால், அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்...
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்...

அழகர் திருவடிகளே சரணம் சரணம் !!🙏🙏🙏

Friday, October 31, 2025

புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகள் ஜெயந்தி விழா 2025

புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகள் ஜெயந்தி விழா 2025....
Bhuvanagiri Sri Azhagiya Manavala Egangi Swamigal Jayanthi Vizha July 2025...

23.7.2025...

ஆடி திருவாதிரையை முன்னிட்டு புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


அன்று இரவு கீழ்புவனகிரி ஶ்ரீ நன்னைய ராமானுஜ கூடத்தில் பாகவதர்கள் புடைசூழ சிறப்பு பஜனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாற்றுமறையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு. பூவராக ராமானுஜாதசர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.



for Regular Updates.....

 Follow our blog.


For more details : WWW.aalayadharisanam.com

YouTube.com/aalayadharisanam

Saturday, October 18, 2025

Maargazhi Thirupavai Sorpozhivu 202 மார்கழி திருப்பாவை சொற்பொழிவு 2024

 



Maargazhi Thirupavai Sorpozhivu 2024 

மார்கழி திருப்பாவை சொற்பொழிவு  2024


திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் ஆலயதரிசனம் அறக்கட்டளை இணைந்து நடத்திய 30 நாள் மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் 






Maargazhi Thirupavai Sorpozhivu 2024 மார்கழி திருப்பாவை சொற்பொழிவு  2024

by Sri. S.Gokulachari 

For more details visit : www.aalayadharisnam.com

Follow us on face book & Instagram : aalayadharisanam

youtube.com/aalayadharisanam

Sunday, November 20, 2022

ஆலய தரிசன பதிப்பகத்தின் வெளியீடுகள் | Aalayadharisanam Publication Book List

 

Slno : ஆலய தரிசன பதிப்பகத்தின் வெளியீடுகள்: விலை 
1 யார் ஸ்ரீ வைஷ்ணவன்                                                             50
2 நித்ய திருவாராதனம்                                                             20
3 ராகு-கேது பரிகாரம்                                                             80
4 ராமானுஜரின் அவதார வைபவம்                                     80
5 ராமாயண வினா-விடை                                                     50
6 சங்கத் தமிழ் மாலை                                                             100
7 இலக்கிய நோக்கில் திருப்பாவை                                      100
8 ஸ்ரீராமனின் குணங்கள்                                                         50
9 காலம் செதுக்கிய கடலூர் மாவட்டம் (திருக்கோயில்கள்) 80
10 திருப்பாவை விளக்கவுரை (Dr.ஏ. வி. ஆர். சுவாமி) 120
11 அமாவாசை தர்ப்பணம்                                                         25
12 மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி ?                                      80
13 ஏன் கோபம் வருகிறது ?                                                                80
14 உங்கள் கணக்கில் ரூபாய் 48600                                              80
15 உலகம் பிறந்தது உனக்காக                                                     80
16 பகவானின் திருநாம வைபவம்                                              60
17 ஸ்ரீ ரங்கநாச்சியார் ஊசல்                                                           60
18 ஸ்ரீ மணவாளமாமுனிகள் நாடக வடிவில்                       100
19 நாட்குறிப்பு நாயகர் அனந்த ரங்கம் பிள்ளை              120
20 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா                                   120
21 திருக்குறளும் கீதையும்                                                               180
22 ராமானுஜ நூற்றந்தாதி விளக்கவுரை                                250
23 ஸ்ரீபாஷ்யம் 4 பாகம் (தமிழில் விளக்கத்துடன்)            800
24 இலக்கிய நோக்கில் திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள் 250
25 ராமானுஜரின் ஒன்பது நூல்கள் ஓர் அறிமுகம்             180
26   ஜோதிடமும் பரிகாரமும்                                                                80
27    ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ்                                                  120
28    கருடபுராணசாரம்                                                                             120
29    கோதைத் துதி (ஸ்ரீரங்கம் முரளிபட்டர்)                              120
30    திருப்பாவை சிறிய விளக்கத்துடன்                                       25
31   கண்ணன் பிறந்தான் பாகவத கதைகள் எளிய நடையில்        250
32   பிராட்டியின் பெருமை  (Dr.ஏ. வி. ஆர். சுவாமி)                 120

புத்தகத்தின் விலை அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது. பிற விபரங்களுக்கு கீழ்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு வேண்டிய புத்தகக்கதை இந்த நம்பருக்கு ஆர்டர் செய்தால் Courier/ VPP/Cash on Delivery மூலம் அனுப்பிவைக்கப்படும்.

To order books : CALL/MESSAGE/Whatsapp : +91 94422 90074
E mail : aalayadharisanam@rediffmail.com

*Courier/Postage செலவு தனி. 


Read More Articles : visit : www.aalayadharisanam.com 
Follow our page : facebook.com/aalayadharisanam


Wednesday, November 2, 2022

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அவதார திருநட்ஷத்ரம் 2022 | PillaiLogachariar Avatara Urchavam 2022

 இன்று 01.11.22 ஐப்பசி திருவோணம். நம் அரங்கனைக் காத்த ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அவதார திருநட்ஷத்ரம்.  மதுரை யானைமலை கொடிக்குளத்தில் அவரது திருவரசில் நடைபெற்ற விழா காட்சிகள்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ.உ.வே.ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகளின் ஆசியுடன் துவங்கியது. சுமார் 600 பேர் ஆசார்யர் அருளுக்கு பாத்திரமாயினர். 

சிறப்பான ததியாராதனம் ஏற்பாடு செய்திருந்தனர்


மதுரை திருமால் அடியார் குழாம் விரிவான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.















For more interesting articles : visit : www.aalaydharisanam.com


Follow our twitter/facebook/instagram page for more updates......