Monday, July 19, 2021

Sri Periyavachan Pillai's Pasurapadi Ramayanam ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்


ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்

Sri Periyavachan Pillai's Pasurapadi Ramayanam - Prabandha Ramayanam 




 “கற்பார்‌ இராமபிரானை அல்லால்‌ மற்றும்‌ கற்பரோ?” -ஸ்ரீ நம்மாழ்வார்‌. (Sri Nammazhwar)

“மனத்துக்கினியானைப்‌ பாடவும்‌ நீவாய்‌ திறவாய்‌” -ஆண்டாள்‌. (Sri Andal)

“நடையில்‌ நின்றுயர்‌ நாயகன்‌ ஸ்ரீ ராமபிரான்‌' - கம்பநாட்டாழ்வார்‌. (Kamban)

ஸ்ரீ ராமாயணம்‌ நாம்‌ படிக்க வேண்டிய நூல்‌. அதை விடுத்து வேறு நூல்களை கற்கலாமா? தேவையில்லை. நமக்கு வேண்டிய அனைத்தும்‌ ராமாயணத்தில்‌ உள்ளது என்கிறார் ‌ பெருமாளின்‌ கலியுக அவதாரமான ஸ்ரீ நம்மாழ்வார்‌. நமது மனத்திற்கு இனிமையைத்தருபவர்‌ ஸ்ரீராமபிரான்‌. எனவே ராமனைப்‌ பாடவேண்டும்‌ என்று அருளியவர்‌ பூமாதேவியின்‌ அம்சமான ஆண்டாள்‌ நாச்சியார்‌. எல்லா விதமான நல்ல குணங்களைக்‌ கொண்டவன்‌ ஸ்ரீ ராமபிரான்‌. மனிதன்‌ இப்படித்தான்‌ வாழவேண்டும்‌ என வாழ்ந்து காட்டிய அவதாரம்‌ என் கிறார்‌ கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார்‌.

மஹாவிஷ்ணுவின்‌ மிகச்சிறந்த அவதாரமான ஸ்ரீராம அவதாரத்தை ஆழ்வார்களும்‌, ஆச்சார்யர்களும்‌, முனிவர்களும்‌, புலவர்களும்‌ மற்றும்‌ எல்லா அறிஞர்களும்‌ போற்றியுள்ளனர்‌. வால்மீகி முனிவர்‌ வடமொழியில்‌ பாடியருளிய ஸ்ரீராமாயணத்தை பலரும்‌ பலமொழிகளில்‌ பாடியுள்ளனர்‌, பாசுரப்படி ராமாயணம்‌ எனும்‌ இந்நூல்‌ ஆழ்வார்கள்‌ எம்‌பெருமான்‌ ஸ்ரீமந் நாராயணனைப்‌ பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்‌ ராமாயணம்‌ சம்பந்தப்பட்ட பாசுர வரிகளால்‌ தொகுக்கப்பட்டது, தமிழ்‌ மந்திரச்‌ சொற்களாலான இந்த ராமாயணத்தை தொகுத்து அருளியவர்‌ பெரியவாச்சான்‌பிள்ளை எனும்‌ ஆசார்ய மஹா புருஷர்‌ ஆவார்‌. தமிழகத்தில்‌ கும்பகோணம்‌ அருகே சேங்கனூரில்‌ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின்‌ மறு அவதாரமாகத்‌ தோன்றியவர்‌. துன்பம்‌ தரும்‌ அரக்கர்களிடமிருந்து (கொரோனா) மனிதர்களை காப்பதற்கு பெருமாள்‌ எடுத்த, ராமாவதாரத்தைச்‌ சொல்லும்‌ பாசுரப்படி ராமாயணத்திற்கு இணையான நூல்‌ எதுவுமில்லை. இந்நூலைப்‌ பாராயணம்‌ செய்வதால்‌ ராமாயணம்‌ எனும்‌ வேதத்தையும்‌ திவ்யப்ரபந்தமும்‌ சேர்த்து சேவித்த இரட்டிப்பு பலன்‌ உண்டு. மேலும்‌ ஸ்ரீராமபிரான்‌. சீதாதேவி, லட்சுமண, பரத, சத்ருக்கன, ஆஞ்சநேய ஸ்வாமி, ஆழ்வார்கள்‌, தேவர்கள்‌, முனிவர்கள்‌, ஆச்சார்யர்கள்‌, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஆகியோரின்‌ திருவருளும்‌, ஆசிகளும்‌ பெற்று மகிழ்வடைவர். மஹாபாரத யுத்தம்‌ முடிந்த பிறகு நாட்டில்‌ ஏற்பட்ட அலங்கோலங்கள்‌ நீங்கி மக்கள்‌ நலமாக வாழ என்ன செய்ய வேண்டும்‌? என பீஷ்மாச்சாரியாரிடம்‌ தருமன்‌ கேட்கிறார்‌. அதற்கு பீஷ்மர்‌ நாடு முழுவதும்‌ பல இடங்களில்‌ ஸ்ரீராமாயண கதைகளைச்‌ சொல்ல ஏற்பாடு செய்யவேண்டும்‌ என்கிறார்‌.  எனவே பக்தர்கள்‌ பாராயணம்‌ செய்ய நாம்‌ - 78 எவளியீடாக வழங்குகிறோம்‌. “கொரோனா” காலத்திலும்‌ எல்லோரும்‌ சேவித்து நாடும்‌, நாமும்‌ நலம்‌ பெற உதவ வேண்டுகிறோம்‌. ராமர்‌ படம்‌ அல்லது பெருமாள்‌ படத்தை துளசி, புஷ்பத்தினால்‌ அலங்கரித்து திருவிளக்கேற்றி வைக்க வேண்டும்‌. அதற்கு கீழே மனைப்‌ பலகையில்‌ கோலமிட்டு சிறிய தட்டில்‌ வெற்றிலைப்‌ பாக்கு, பழம்‌ வைக்க வேண்டும்‌.




இராமாயணம்‌ பாராயணம்‌ செய்யும்‌ இடங்களில்‌ சிரஞ்சீவியான, ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி வந்து கேட்டு அருள்‌ புரிவதாக ஐதீகம்‌. எனவே அவருக்குரிய  மரியாதை அளிக்க வேண்டும்‌. முதல்முறை பாராயணம்‌ செய்யும்‌ போது வைணவப்‌ பெரியவர்‌ ஒருவரை அழைத்து அவரை குருவாகக்‌ கொண்டு பாராயணம்‌ செய்யத்‌ தொடங்க வேண்டும்‌.

பாராயணம்‌ முடிந்த பின்‌ நமது வசதிக்கேற்ப பிரசாதம்‌ அல்லது பழங்கள்‌, பால்,‌ நெய்வேத்யம்‌ செய்து வணங்க வேண்டும்‌. குருவை வணங்கி ஆசி பெற வேண்டும்‌. இப்படிப் பல விதங்களில்‌ எல்லோரும்‌ எல்லா சமயத்தைச்சார்ந்தவர்களும்‌ போற்றிய ஸ்ரீராமபிரான்‌ பெருமைகள்‌ கூறும் இந்த மந்திரத்தை நாம்‌ தினசரி நமது வீட்டு பூஜையறையில்‌ சேவித்துப்‌ பயன்‌ பெறுவோமாக.


பாசுரப்படி ராமாயணம் தினசரி சேவிப்பதால்‌ கிடைக்கும்‌ பலன்கள்:‌

Benefits of  Reciting Pasurapadi Ramayanam :

வால்மீகி முனிவர்‌, கம்பர்‌, துளசிதாசர்‌, போன்றோர்‌ அளித்துள்ள இராமாயணத்தை விட இதற்கு ஒரு தனிச்சிறப்பிற்கு காரணம்‌,  முனிவர்‌, தேவர்கள்‌ இவர்களைப்‌ போன்றவர்களை காட்டிலும்‌ எம்பெருமானை அனுபவிப்பதில்‌ முதலாக விளங்குகிறார்கள்.‌

ஆழ்வார்கள்‌. மற்றைய ஆசிரியர்கள்‌ உருவாக்கிய இராமாயணத்தில் அவரவர்‌ தனிப்பட்ட அனுபவமே அமைந்திருக்கும்‌. இதுவோ பன்னிரு ஆழ்வார்களின்‌ அனுபவங்கள்‌  நிறைந்தது.

* கடவுளை நாம்‌ அடைவதற்கு வழி காட்டுவது வேதங்கள்‌

* ராம - ரிக்‌ வேதம்‌, மா - சாம வேதம்‌, ய - யஜுர்வேதம்‌, ணம்‌ -

அதர்வணம்‌. இவ்வாறு 4 வேதங்களில்‌ பொருள்யாவும்‌ ராமாயணத்‌தில்‌ அடங்கியுள்ளது.

* மிகப்புனிதமான சகல பாவங்களையும்‌ போக்க வல்ல ராமாயணம்‌, மனிதர்க்கு சர்வ காரிய சித்திகளும்‌ அளிப்பதோடு நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்‌ என ஸ்கந்தபுராணம்‌ கூறுகிறது, பிரபல ஜோதிடர்களும் இக்கருத்தை (குமுதம்‌ ஜோதிடம்‌, தினமணி  வெள்ளிமணி) யே கூறி வருகிறார்கள்‌.

* ஸ்ரீராமரின்‌ புத்திரர்கள்‌ லவன்‌, குஜன்‌ ராமாயணத்தை பாடி அரங்கேற்றம்‌ செய்யும்‌ போது அரியணையில்‌ வீற்றிருந்த ராமர்‌ கீழே இறங்கி மக்களோடு அமர்ந்து இதை கேட்டாராம்.

* கைலாயத்தில்‌ பூததணங்களின்‌ தலைமைப்‌ பதவிக்கு போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான்‌ மூவுலகை முதலில்‌ சுற்றி வருபவர்க்கே அப்பதவி என்றாராம்‌.  விநாயகர்‌ “ராம என்று தரையில்‌ எழுதி தூப, தீபம்‌ காட்டி மும்முறை வலம்‌ வந்து வணங்கி கணங்களின்‌ பதியான தலைமைப்‌ பதவியை பெற்றாராம்‌. ‌

* இவ்வாறு ராமரைவிட, ராமாயணமும்‌ அதை விட ராம நாமமும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

* பயன்‌ எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஸ்ரீராம அவதாரத்தை கூறும்‌ - பாசுரப்படி இராமாயணத்தை நீங்கள்‌ மனனம்‌ செய்து வந்தால்‌ கிடைக்க வேண்டியவை ஏற்ற காலத்தில்‌ கிடைக்கப்பெறும்‌. இது உறுதி.

-  ஸ்ரீ ராமஜெயம் -

No comments:

Post a Comment