Sunday, July 25, 2021

மேலான அறிவு

ஆசார்யன் ஆசீர்வாதம் பெற்ற நாம் பகவானின் திருவடிகளில்

புண்ணியங்களும் சரிந்து சிதைந்து விடுகின்றன. நம்மைவிட்டு அகன்று

சரணடைந்து விடுவதால், இரு வல்வினைகளும், பாபங்களும்

விடுகின்றன. புண்ணியங்களும் பாபங்களும் அதன் பலன்களை

அனுபவித்தே தீரவேண்டும். வேறோரிடம் தேடு என்ற ஸ்ரீ

நயினாச்சாரியாரின் வார்த்தைகளை கவனிக்க வேண்டும். இப்பாப

புண்ணியங்கள் அழிவதில்லை. புண்ணிய பலன் நம்மை

வேண்டியவர்களையும், பாப பலன் நம் விரோதிகளையும் அடையும்

என்று வேதம் சொல்கிறதும், இதனால் தான் யாருடைய

விரோதத்தையும் சம்பாதிக்க கூடாது என்று ஆசார்யர்கள் நமக்கு உபதேசம்

செய்கிறார்கள். பாபங்களும் நரக வேதனையும் வேண்டாம்.

புண்ணியங்களையும் சுவர்க்க அனுபவத்தையும் ஏன் வேண்டாம்

என்று சொல்ல வேண்டும். புண்ணியமும் சுவர்க்கமும் இன்பம்

பயப்பனவே இவைகளை ஏன் விட வேண்டும். ஏனென்றால் சுவர்க்கத்திலும்

நிரந்தரமாகத் தங்கமுடியாது. புண்ணிய பலன் முடிந்தவுடனே

சுவர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப்படுவோம். பிறகு பிறப்பு, இறப்பு

என்னும் சக்கரச் சுழலில் விழுந்து தவிப்போம். பிறவாப் பேறுதான் மோட்சம்

- வீடுபேறு பெறலாம். அங்கு எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு

ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை செய்து வாழலாம்.சரணடைந்த

நம்மை ஆசார்யன் பகவான் திருவடிகளில் சேர்க்கிறார். வினையேன்

வினைதீர மருந்து ஆகிறான் பகவான். உடனே சார்ந்த இரு

வல்வினைகளும் சரிந்து விடுகின்றன. ஆகவே ஆசாரியனின் திருவடிகளே

நமக்குப் புகலிடம். ஆளவந்தாருக்கு நாம் அடிமையாக வேண்டும். நாதமுனி

கழலே நாளும் தொழதெழுவோம், ஸ்ரீமன் நாதமுனிகளின் திருவடிகளில்

சரணடைவோம்.

திருவரங்கத்தமுதனார் என்னும் மஹான் ஸ்ரீ கூரத்தாழ்வானின்

சிஷ்யர். திருவரங்கத்தமுதனார் இயற்றியது இராமானுஜ நூற்றாந்ததி

ஆசார்யன் பெருமை பேசும் 108 பாசுரங்கள் ஒவ்வொரு பாசுரத்திலும்

இராமானுஜரின் திருநாமம் ஒலிக்கின்றது.108 முறை இராமானுஜரின்

திருநாம சங்கீர்த்தனம். ஆசார்யன் திருவடிபணிந்தால் மருள் சுரந்த

முன்னைப் பழவினை வேரறுத்துப் போகும் என்கிறார். அநாதிகாலமாக

நம்மை அறியாது நம் அஜ்ஞானத்தால் நம்மை வருத்தும் கர்ம வினைகள்

வேரோடு வாசனை கூட இல்லாமல் அறுந்து விழும் என்கிறார். இராமானுஜ

நாம சங்கீர்த்தனத்தின் உயர்ந்த பெருமை என்ன? இறந்தது வெங்கலி

கொடுமையான கலியின் துன்பங்களிலிருந்து விடுதலை. ஆசார்யனே

உறுதுணை, ஆசார்யனே என்தன் மாநிதி, ஆசார்யனே என் தன்

சேமவைப்பு, ஆசார்யனே எனக்காரமுது என்று உணர்ந்து வாழ்வோம்.

No comments:

Post a Comment