Monday, July 5, 2021

அறுபதுக்கறுபது ஆலயதரிசன கோகுலாச்சாரி

 அறுபதுக்கறுபது ஆலயதரிசன கோகுலாச்சாரி

- ஆசுகவி ஆராவமுதன்‌, கள்ளக்குறிச்சி.


எவரெஸ்ட்தான்‌ புவனத்தில்‌ மிக உயர்ந்த

இமயமெனச்‌ சொல்வார்கள்‌ புவனம்‌ தன்னில்‌

அவதாரம்‌ புவனகிரி மலைகள்‌ உச்சி

அருள்ராக வேந்திரர்‌ சீர்‌ ஏகாங்கி

அவதாரத்‌ தலம்‌ ஈடின்‌ எழில்‌ உரைத்த

ஆம்முதல்வன்‌ புருஷோத்தம நாயுடுத்தந்‌

தவவூராம்‌ கோகுலாச்‌ சாரியார்‌ வாழ்கின்ற

தமிழ்‌ ஆலய தரிசனஊர்‌ நீடு வாழ்க


தென்னைமரம்‌ குளநீரில்‌ முகத்தைப்‌ பார்க்கும்‌

திகழண்ணா மலைபல்கலை கழகத்தில்சீர்‌ வேலை!

தன்துறையோ பொறியியல்தான்‌ என்ற போதும்‌

தமிழறிஞர்‌ பாரதிநாதனெனப்‌ பேரார்‌

ஒன்றல்ல பலதுறையில்‌ ஞானம்‌ ! சற்றும்‌

ஓயாமல்‌ வைணவத்துற்‌ குழைப்பதற்கே

பொன்பிறவி தந்துள்ளான்‌ சித்ரகூடன்‌!

புகழ்மங்கை மன்னனது கவிதை பெற்றேன்‌!


பத்திரிக்கை நடத்துதற்கு சோரா உண்மை

பாங்குமனம்‌ அலைஓசை கல்கி யைப்போல்‌

சித்தரிக்கத்‌ தெரியவேண்டும்‌ ! தினமணி தன்‌

சிங்கார கலாரசிகன்‌ வசியம்‌ வேண்டும்‌

அத்தனையும்‌ கைரேகை யாகப்‌ பெற்றார்‌

ஆலயதரிசனம்‌ தன்னால்‌ வெற்றி பெற்றார்‌

உத்தமிக்கு அருகிருந்து பேசுதவல்‌ போல்‌

சாமர்த்யம்‌ கோகுலாச்சா ரியர்‌ எழுத்து


உன்னால்மு டியும்‌என்ற எழுத்து வீரர்‌

ஓங்குபுகழ்‌ சுகிசிவத்தின்‌ பேச்சைச்‌ சுட்டி

உண்மையுளோர்‌ மெச்சுவகை குற்றம்‌ சொல்ல

உள்ளாரோ? நக்கீரர்‌ இவரைப்‌ போல

தன்மதத்தை போற்றிடுவார்‌ அன்று, மற்ற

தவ மதங்கள்‌ குறை சொல்லா ஆழ்வார்‌ போன்றார்‌!

தன்புகழைப்‌ போற்றாதார்‌ தராசு முள்போல்‌

தகைவாதம்‌ செய்வதிலே மாறார்‌ நீதி!


ஆழிமழைக்‌ கண்ணாபா சுரத்தில்‌,மற்றும்‌

அவ்வெழிளுடை அன்னைமீர்‌ பாசு ரத்தில்‌

வாழிதமிழ்‌ ழகரங்கள்‌ பத்து காட்டி

வடித்த எழில்‌ ஆண்டாளை குறை சொல்சொன்ன

பாழியினை , கலியுகத்து நரசிம்மன்‌ போல்‌

பழிவர்க்க யாருண்டு கோகுலாச்‌ சாரி

ஆழிக்கு இடகற்கள்‌ தப்பல்‌ உண்டோ?

அணைதிறந்தால்‌ மணலின்புல்‌ என்னவாகும்‌!


அரசியலார்‌ வெற்றிபெறல்‌ இல வசத்தால்‌

அவர்கள்போல்‌ வசியம்செய்‌ வழியும்‌ கண்டார்‌

அரும்‌ ஆழ்வார்‌ சரித்திரங்கள்‌ பாவை பாடல்‌

அயராமல்‌ கோஷ்டிக்கு கொடுப்பார்‌,மற்றும்‌

வரும்‌ மழை போல்‌ அழைக்குமிடம்‌ வந்து பெய்வார்‌

வரும்‌ சொற்கள்‌ முரசறையும்‌ , மகுடி ஆகும்‌

தரும்செய்தி அரித்தனால்‌,மூடி இல்லா

தமிழ்க்காது , வயல்நிறைக்கும்‌ பக்தி வெள்ளம்‌


வங்கத்தின்‌ கூம்பதுவோ சித்ரகூட

வள்ளல்பெரும்‌ பசுவான ஏவியார்‌ தான்‌

தங்குமிடம்‌ அதுபோதும்‌ ! காமதேனு

தரும்‌ எல்லாம்‌ என அறிந்த கோகு லாச்சார்‌

தங்கிவிட்டார்‌ கைங்கர்ய இடம்‌ தேர்ந்‌ திட்டார்‌!

தானாக நெய்வேலி கரிசெல்‌ போல

பொங்குபுகழ்‌ வைகுந்த முன்‌ பதீவை

பொறுத்திட்டார்‌! கைங்கர்ய நெடுநாள்‌ வாழ்வார்‌ !


சுரிகுழலிங்‌ சனப்புனல்‌ சூத்திரத்தைச்‌ சற்றும்‌

சோராமல்‌ சொலுமெங்கள்‌ தோப்புச்‌ சாமி

சரியாக “அவன்‌ பொருளை அவனே காப்பான்‌”

சாதிப்பார்‌ அதற்கேற்ப கோகுலாச்‌ சாரி

சரிவாழ்க்கை இசைமக்கள்‌ செல்வ மெல்லாம்‌

சாதித்தே இயக்குகிரான்‌ அறுப தென்னும்‌

பரியோட்டம்‌ நூறதையும்‌ கடக்கும்‌, கோடி

பாகவதர்‌ வரம்பெற்றார்‌ குடும்பம்‌ ஓங்கும்‌


அன்றாட வைணவனின்‌ வாழ்க்கைப்‌ பாங்கு

அவனில்ல நிகழ்ச்சிகளின்‌ இலக்கணங்கள்‌

கண்களிக்கும்‌ திருமணத்தின்‌ ஐதீகங்கள்‌

கருத்தேற்கும்‌ விளக்கங்கள்‌ சொல்வார்‌ இன்னும்‌ !

எண்ணத்தில்‌ கேள்வி பதில்‌ விளக்கம்‌ தந்தே

இருட்டுலகில்‌ கைவிளக்காய்‌ வழிகள்‌ காட்டும்‌

பொன்மனத்தார்‌ கோகுலாச்சாரியார்‌ தம்மை

புகழ்ச்‌ சொல்‌ தேடுகிறேன்‌ கல்லைக்‌ கம்பன்‌.

 

சடகோப கல்யாண ராமன்‌ தங்கள்‌

சாதனையாம்‌ கலியனொலி மாலை தன்னில்‌

அடலேறாய்‌ இயக்குனராய்‌ பரிமளிப்பார்‌ !

அடக்கத்தில்‌ உடையவர்க்கோர்‌ ஆழ்வான்‌ போன்றார்‌!

விடத்தக்க ஐஸ்வர்ய கியாதி மோகம்‌

விட்டுவிட்ட வெள்ளாடைத்‌ துறவி

நடந்துகாட்டி நடக்கச்செய்‌ அஸ்ம தாசான்‌

நல்வாழ்க்கை பெருவெற்றி நீடு வாழ்க !


அத்வைத அழகு நன்னூல்‌ ,முதுகுன்றத்தில்‌

அரங்கேற்றம்‌ மகாராஜா துறவு ! விசிஸ்ட

அத்வைதம்‌ அவ்வூரில்‌ ஓராண்‌ டிண்மேல்‌

அழகுதிரு வாய்மொழியின்‌ விளக்கம்‌ சொன்ன

சித்தரிவர்‌ ரங்கமன்னார்‌ சபை யளித்த

சிங்கார பாலபோகம்‌ ததியன்‌ னத்தை

சித்தத்தில்‌ நாநுனியில்‌ வைத்து இந்த

சிங்கார பேச்சால்‌ வாழ்த்து கின்றேன்‌.


கண்டியூரின்‌ கலியனைப்போல்‌ , ததியர்‌ சேவை

தவசெய்ய னூர்சினுவாஸ சுவாமி யைப்போல்‌

தென்மதுரை ரங்கநாதன்‌ , தமிழ்நன்‌ நாட்டில்‌

திருவோங்கு வைணவத்தை வளர்ப்பேர்‌ போல

அன்புமிகு கோகுலாச்சா ரியார்‌ நீரே

அருந்ததொண்டு புரிந்திடுக ! பாதி தூக்கக்‌

கண்ணகழன்‌ தாள்பற்றி வணங்கு கின்றேம்‌

கவியமுதன்‌ வாழ்த்துகிறேன்‌ வாழ்க! வாழ்க !

No comments:

Post a Comment