Monday, March 28, 2016

ஆனந்தரங்கம்பிள்ளை - புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியாளர்களுக்கு துபாஷ்
(மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்).
அக்கால சரித்திர வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தன் பார்வையில் நாட்குறிப்புகளாக எழுதியவர். இவர் நாட்குறிப்புக்கள் மூலம் நாம் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு.
விலை ரூபாய் 150/- மட்டும் .
புத்தகத்தை V.P.P. யில் பெற உங்கள் முகவரியை 94422 90074 என்ற number க்கு SMS / WHATSAP செய்யுங்கள்.
சிறப்பு சலுகையாக இலவச POSTAGE + VPP charge


ONLINE இல் ORDER செய்ய  இல் செய்ய https://goo.gl/TThsWd

Saturday, March 19, 2016

அச்சு


  தலைப்பு இல்லாவிட்டாலும் தலைப்பை ஏற்படுத்திப் பேசுபவர்கள் உண்டு.
    தலைப்பு கிடைத்தாலும் தான்பாட்டுக்கு பேசுபவர்கள் உண்டு.
    ஓர் திறமையான இசைஅரங்கு . இசைவாணர் பாடிக் கொண்டிருந்தார் . நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பக்க வாத்தியத்திற்கு உள்ளூரில் உள்ள ஒரு பையனை ஏற்பாடு செய்திருந்தனர் .
    கச்சேரி முடிந்தபிறகு கேட்டனர்.
    ‘பையன் எப்படி?உங்கள் பாட்டுக்கு வாசிச்சாரா ?
     பாடகர் சொன்னார். என் பாட்டுக்கு வாசிக்கவில்லை. தன் பாட்டுக்கு வாசிச்சார்!.
    தலைப்பு கொடுத்துவிட்டு இன்ன தலைப்பில் பேகிறேன் என்று அறிவித்து தன் பாட்டுக்கு பேசுவர்கள் உண்டு. அவர்கள் தான் இன்று அதிகம்.
    அடியேனுக்கு அந்தத் துணிச்சல் இல்லை.
    எனவே தலைப்பைக் கேட்டேன்.
    தலைப்பு வேண்டுமா என்றார் ஆலி நாடன் ஸ்வாமி.
    ஆம். ஏதேனும் ஓர் மையம் - அச்சு - இருந்தால்தான் அதனை ஒட்டி பேச்சைச் சுழற்ற முடியும் என்றேன்.
    உடனே பிடித்துக்கொண்டார்.
   "அச்சு"   என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமே என்றார்.
    வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பது இதுதான்.
    நான் பாட்டுக்கும் திருநகரி மகாத்மியம் அல்லது திருமங்கை ஆழ்வார் வாழ்வும் வாக்கும் என்று பேசிவிட்டுப் போகலாம்.
    இப்போது தலைப்பு ’அச்சு’ ன்று ஆகி நச் என்று என்னை நசுக்கிவிட்டது.
        .....    .....    .....    .....    .....
    அச்சு என்றால் ஓர் மையம்.உருளை. இப்படி பல பொருள்.
    சக்கரத்திற்கு நடுவில் சக்கரம் சுற்றுவதற்கு ஆதாரமாக விளங்கு
வது அச்சாணி.
    எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நாம் நித்தியம் சொல்லும் ஸ்லோகம். வைணவ குரு பரம்பரைக்கு அச்சாணி.
    என்ன ஸ்லோகம்?
    லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
    அஸ்மதாசாரிய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.
    முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள் அப்புறம் ஆளவந்தார்....
    நமது ஆசாரிய குலதிலகமான ஸ்வாமி நாதமுனிகள் வைணவ மரபுக்கு மையம் அல்லவா!
    கூரத்தாழ்வானின் ஞான தீட்சண்யம் அறிவுத்திறன் இந்த சுலோகத்தில்  வியக்கவைக்கும்.
    ஒரு ஸ்லோகம் எழுதினால், அதன் அர்த்தம் எத்தனை யுகங்களா
னாலும் பொருந்தி நிற்க வேண்டும்.
    இந்தச் சுலோகம் அப்படிப்பட்டது.
    லக்ஷ்மி நாதன்.  பகவானுக்கு ஸ்ரீநிவாஸன் என்று பெயர். திருமகள் நாதன். திருமால்.வெறும் மால் அல்ல.ஸ்ரீமந் நாராயணன்.
    நம் ஸம்பிரதாயத்தின் உயர்வு அப்படிப்பட்டது.
    நான் அலங்காரமாகப் பேசுபவன் அல்ல, நுட்பமாகப் பேசுபவன் அல்ல.  உள்ளது உள்ளபடி, உணர்ந்தது உணர்ந்தபடியும் உரைப்பவன்.
    இதிலே ஆசார்யன் பெருமை பேசப்படுகிறது.
    சிஷ்யன் பெருமை பேசப்படுகிறது.
    பிராட்டி பெருமை பேசப்படுகிறது.
    பகவான் பெருமை பேசப்படுகிறது.
    நாதயாமுனி மத்யமாம் இது தான் அச்சு.
    ஆசார்யரான நாதமுனிகளை அச்சாகக் கொண்டு ஸ்ரீவைஷ்வை சமயம் என்னும் சக்கரம் சுழல்கின்றது.
    நாதமுனி என்பது அவர் திருநாமம். அப்படி என்ன காரியம் செய்தார் என்று தோன்றும்.
    ஒருவருக்கு இருதயநோய். அடைப்பு வந்து விட்டது. பிழைப்
பாரா பிழைக்க மாட்டாரா என்பது தெரியாத நிலையில் ஓர் மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
    டாக்டர் அருமையான டாக்டர்.
    தன் அபாரத் திறமை அத்தனையையும் பயன்படுத்துகிறார். சளைக்காமல் முயற்சி செய்கிறார்.  ஆபத்தான நோயாளியைக் காப்பாற்றி விடுகிறார்.
    ஸ்வாமி நாதமுனிகள் தான் அந்த டாக்டர்.
    வந்த நோயாளி போல்தான் ஸ்ரீவைஷ்ணவ சமயம் அன்றைக்கு இருந்தது.
    நின்று போன சக்கரத்தைச் சுழலவிட்டவர் நாதமுனிகள்.
    காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்கு
    தாளம் வழங்கி தமிழ் மறையின் இன்னிசை தந்த வள்ளல் நாதமுனிகள். எனவே முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள்.
        ......    .....    .....    .....    .....
    ஆனால் அந்த அச்சு (ஸ்வாமி நாதமுனிகள்) சுழல்வதற்கு அவ
ருக்கு ஒரு அச்சு தேவைப்பட்டது. அந்த அச்சுதான் கண்ணிநுண் சிறுத்
தாம்பு.
    திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாரின் பிரபந்தத்தைப் பிரகாசப்
படுத்தினார்.
    ஆனால் நாதமுனிகள் காலத்தில் பிரபந்தம் மறைந்திருந்தது. எப்படிப் பிரகாசப்படுத்தினார்? அதற்கு ஒரு அச்சு குடந்தைப் பாசுரம்.
    ‘ஆரா அமுதே‘  அழகான தமிழ்ச்சொல்.
    வடநாட்டிலே லோகசாரங்கர் என்றொரு முனிவர். வடநாடு வந்த ஒரு தேசாந்திரியிடம் கேட்டார்.
    தெற்கேயிருந்து அதாவது தமிழ்நாட்டிலே இருந்து வருகிறீர்களா என்ன விசேஷம் என்று.
    அவர் சொன்னார்.
" ஒரு விசேஷம் உண்டு. திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் ஏகமான புகழொடு பிரச்சாரமாகிறது...
    இதில் ஒரு பாட்டு சொல்லணும்!"
   "பாட்டு தெரியாது. ஆரம்பிக்கிற முதல் வார்த்தை அடிக்கடி காதில்விழும்!"
    "சொல்லும்!"
   "ஆராஅமுதே"  என்று அழகாகச் சொன்னார்.
    லோகஸாரங்கமுனிவர் துள்ளிக் குதித்து எழுந்தார். ஆஹா அபாரம்! ஆரா அமுது என்றால் ஆறிய அமுதும் உண்டோ! என்ன அற்புதம்!  என்ன அற்புதம்!
    அடியைப்பிடி என்பது போல அவருக்கு ஓர் அச்சு கிடைத்தது. பிடித்துக் கொண்டார். திருவாய்மொழியைத் தேடி தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். !
    அச்சு பிடிப்பவரையும் தன் புள்ளிக்கு இழுக்கும்.
    அப்படித்தான் நாதமுனிகளை ஆரா அமுதே இழுத்தது.
    விறுவிறுவென்று விசாரித்துக் கொண்டு திருக்குருகூர் அதாவது ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிட்டார்.










    போலீஸ்காரர்கள் ஒரு துப்புகிடைத்தால் முழு வழக்கையும் விசாரித்து விடுவார்கள்.
    நாதமுனிகள் ஓர் ஆரத்தைப் பிடித்துக் கொண்டு மையப் புள்ளியை நோக்கி நடந்தார். அங்கே பராங்குசதாஸர் என்றொரு அடியவர். நம்மாழ்
வாரின் சீடரான மதுரகவியாழ்வார் குலத்தில் வந்தவர்.
    அவரிடம் விசாரிக்கிறார்.
    அவர் எனக்குத் தெரியவில்லை அனால் ஒரு விஷயம். எங்களுக்கு. மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு தெரியும். அதைப் பன்னீராயிரம் முறை பாராயணம் செய்தால் ஆழ்வார் தோன்று
வார் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்றார்
    நாதமுனிகள் ஊன் உறக்கமின்றி தமிழ்வேதத்தை மீட்டெடுக்க பன்னீராயிரம் முறை தவம் செய்தார்.
    சீடரைப்பிடித்தால் குருவைப்பிடிக்கலாம்.
    நாலாயிரப் பிரபந்தத்தின் அச்சு கண்ணிநுண் சிறுத்தாம்பு. நாதமுனிகள் பாடினார். குரு கிடைக்கிறாரா?    
                                                                                                                        - தொடரும்

Saturday, February 13, 2016

ஆலயதரிசனம் பிப்ரவரி 2016



இந்த இதழில்..........

 






















தலையங்கம்                   
கண்ணன் பிறந்தான்
கவிதை   
விபீஷணன் யார்?
ஸத் சங்கம் (கேள்வி பதில்)
இசையும் இன்னிசையும்
மனுதர்மம் என்னதான் சொல்கிறது?
பத்மஸ்ரீ டி.கே.ஸ்ரீநிவாஸன்
பச்சைவண்ணப் பெருமாள்
வாழ்வியல் சடங்குகள்   
பெரும்புதூர் கருணையங்கடல்
பெரிய உடையாரும் தசரதனும்   
அலகிலா விளையாட்டு

இதழை SUBSCRIBE செய்ய  http://goo.gl/4B5HlD

மேலும் அன்றாட வைணவச் செய்திகளுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Saturday, January 1, 2011

எள் - ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

ஆகார நியமத்தில் எள் சேர்க்கக்கூடாது என்பது சம்பிரதாயமாக இருக்கிறது. அதில் "எள்" உணவைப் பற்றி தனது கருத்துக்களை இங்கே தெரிவிக்கிறார் ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுப்பு தெரிவிக்கலாம் காரண காரியங்களோடு!

    வைணவர்கள் அனுஷ்டானமும் ஆகார நியதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்திலேயே கடுமையாக இருந்தால் பலரும் பயப்படுவார்கள். படிப்படியாக வலியுறுத்த  வேண்டும். குறிப்பாக எள் பற்றி அடியேன் கருத்து இது.

    மனிதனுக்கு தேவையானது எள். நல்ல எண்ணெய் என்று பெயர் எப்படி வந்தது? மற்ற எண்ணெய்களுக்கு எல்லாம் தலைப்பெயர் உண்டு. ஆமணக்கு: ஆமணக்கு எண்ணெய். தேங்காய்: தேங்காய் எண்ணெய். மணிலா: மணிலா எண்ணெய். இப்படி எல்லாம் தலைப்பு பெயர் உண்டு. ஆனால் நல்லெண்ணைக்கு கிடையாது. இதற்கு ஒரு செவிவழிச் செய்தி உண்டு.
    பாற்கடல் கடையும்போது மகாலட்சுமி வெளிப்பட்டார். அப்போது பகவான் ஒரு திருவிளையாடல் நடத்த உத்தேசித்து எள் செடி விதைத்திருந்த தோட்டத்தில் தம்மை மறைத்துக் கொண்டார்.
    லட்சுமி அந்தச் செடிகளை மிதித்துக் கொண்டு சென்று பெருமாளைத் தேடினார். அவள் எள்ளை மிதித்தபோது எண்ணெய் வெளிப்பட்டது. மகாலட்சுமி மிதித்ததால் நல்ல எண்ணெய் ஆனது. அந்த எண்ணெயுடன் கலந்த லட்சுமி அப்படியே ஓடிச் சென்று பெருமாளுடன் கலந்து விட்டாள். இதனால் லட்சுமி நல்லெண்ணெய்யில் குடி இருப்பதாக ஐதீகம். இதுவே தீபாவளி ஸ்நானம் செய்வதற்கு நல்லெண்ணெய் ஸ்நானம் மிகவும் முக்கியம்.
                                (தினமலரில் 5.11.2010  வெள்ளி இதழில் தொகுப்பு)


    எள்ளு இது கண்ணுக்கு ஒளியும் உடலுக்கு வெண்மையும் தரும். இரத்தப் பெருக்கை உண்டாக்கும்.
    திருமலையில் கொலு பஞ்சாங்கச் சிரவணம் நடக்கும். தோமாலை சேவைக்குப் பிறகு கொலு பேர மூர்த்தியை கருட மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பஞ்சாங்கம் படிப்பர். பின்பு வெள்ளிக்கிண்ணத்தில் எள்ளுப்பொடியையும், சர்க்கரையையும் கலந்த பிரசாதம் நிவேதனமாகும். எள்ளுப்பொடி பிரசாதம் புத்திர சந்தானத்தை அளிக்க வல்லதாம்.
    திருமலை வெங்கடாஜலபதிக்கே ஸ்ரீ ராமாநுஜர் எள்ளும் சர்க்கரையும் கலந்து பெருமாளுக்கு எள்ளுப்பொடி பிரசாதம் நிவேதனம் செய்யும் பொழுது நாம் ஏன் உபயோகிக்கக் கூடாது?