Sunday, November 16, 2025

ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா - Bhuvanagiri



ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா - புவனகிரி

Sri Venkata Ramana Bagavathar 244 th Jayanthi Vaizha - Bhuvanagiri 



 ஆலயதரிசனம் அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீமாந். வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா  கொண்டாடப்பட்டது.

அன்று புவனகிரி கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜ கூடத்தில் 23.02.2025 அன்று 6.00 மாலை மணிக்கு திருமதி. விஷ்ணுபிரியா சுதர்ஸன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி  செய்யப்பட்டிருந்தது. அவருக்கு பக்க வாத்தியமாக புவனகிரி. முனைவர். திரு. G.ஸ்ரீராம் அவர்கள் வயலினும், சிதம்பரம் திரு. ராஜேஷ் அவர்கள் மிருதங்கமும் வாசித்தனர்.

ஆலயதரிசனம் ஆசிரியர் திரு. கோகுலச்சாரி அவர்கள் நிகழ்ச்சியின் முடிவிலும் தொடக்கத்திலும் வேங்கட பாகவதரை பற்றிய சிறு குறிப்பையும் அவருடைய பாடல்களை மையமாக வைத்து அன்றைய இசை நிகழ்ச்சி நடந்ததை பற்றியும் பேசினார். கலைஞர்களை திரு. பூவராக ராமானுஜதாஸரும் திரு. ராஜ்மோகன் ராமானுஜதாஸரும் கௌரவித்தனர்.

விழாவின் முடியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. புவனகிரியில், ஸ்ரீ வெங்கடரமன  பாகவதர் அவர்களின் ஜெயந்தி விழா முதல் வருடமாக, இசைவிழாவாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.









Monday, November 10, 2025

திருமாலிருஞ்சோலையும் - திருமலையாண்டன் சுவாமிகளும்....

திருமாலிருஞ்சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனத்தை முடித்து விட்டு, திருமாலையாண்டான் ஸ்வாமி தமது திருமாளிகைக்குத் திரும்புவது வழக்கம்..

... காலம் செல்லச் செல்ல, அவருக்கு முதுமையின் காரணமாகக் கண்பார்வை மங்கியது..

...அதனால்,  ஒரு கைங்கர்யபரர், 
அவருக்குத் திருவடி பந்தம் (விளக்கு) பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு செல்லுவார்.. 

அவரது பெயர் "திருவடிபிச்சை" என்கிற சுந்தர்ராஜன்.. 

...அந்தக்காலத்தில் பொதுவாகச் சோலைகளுக்குச் செல்லுகிற வழி முழுவதும் இருட்டாகத்தான் இருக்கும்..

...அதுவும், திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதியாகவே இருந்தது..

தமது கண்பார்வை மங்கியதால், 
வழி காட்டுவதற்கு, இந்தத் திருவடிபிச்சனை உதவிக்கு வைத்திருந்தார் திருமாலையாண்டான்...

...இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து, அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு, தமது திருமாளிகை செல்லத் திருமாலையாண்டான் ஆயத்தமானபோது, 

திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனைக் காணவில்லை..
(அக்காலத்தில் தமக்குக் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமாலையாண்டான், 
திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை
"சுந்தரராஜா" - என்றழைத்தார்..

...உடனே, 
கையில் திருவடி பந்தத்துடன் வந்த சுந்தரராஜன்,
"ஸ்வாமின்... 
அடியேன் வந்துள்ளேன்..." என்று சொல்லி, 
திருமாலையாண்டானுக்கு முன்னால் வழிகாட்டியபடியே சென்று, 

அவரது திருமாளிகை வந்ததும் அவரிடம்,

 "ஸ்வாமி... 
அடியேன் திரும்பிச் செல்ல நியமனம் வாங்கிக்கிறேன்..." என்று அனுமதி பெற்றுத் திரும்பினான்..

மறுநாள் அதிகாலையில் திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சனாகிற சுந்தரராஜன், திருமாலையாண்டான் திருமாளிகைக்கு வந்து, அவரை சாஷ்டாங்கமாகச் சேவித்து, 

"ஸ்வாமின்... 
அடியேன் தெரியாமல் உமக்குத் திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில், நேற்று அபச்சாரம் செய்துவிட்டேன்.. 

...தயவுகூர்ந்து அடியேனைத் தேவரீர் மன்னித்தருள வேண்டும்..." என்று கூறவும்,

திருமாலையாண்டான், 
"என்னடா சொல்கிறாய் ? 
நீ என்ன அபச்சாரம் செய்தாய்?.." என்று கேட்க,

"..ஸ்வாமி... 
நேற்று மாலை உடல் அசதியால், மாலையிலிருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன்... 

...அதனால், எப்போதும் தேவரீருக்குத் "திருவடி பந்தம்" பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு வருகிற என்னால்,  நேற்று வர முடியாமல் போயிற்று...

ஸ்வாமி.. 
தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில், விளக்கில்லாமல் எப்படி இந்தத் திருமாளிகைக்கு எழுந்தருளினீர்?.." 
..என்று சுந்தரராஜன் கேட்கவும், 

திருமாலையாண்டான்,

"..இல்லையே..
நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்குத் திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்றுப் போனாயே.." - என்று சொல்ல, 

"..ஸ்வாமி... 
அடியேன் நேற்று வரவேயில்லை!.." என்று சுந்தர்ராஜன் மறுக்க,

...அப்போதுதான், திருமாலையாண்டானுக்கு,
நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல.. சாக்ஷாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே.. என்று புரிந்தது..

....உடனே, திருமாலிருந்சோலை சென்று, 

"ப்ரபு!.. 
தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து,
இந்த அடியவனுக்கு வழி காட்டினீரா?....." 
என்று அழகரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கதறி அழுதார்..

...சுந்தர்ராஜனான அந்த அழகர், திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து, கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும்,

திருமாலையாண்டான் அந்த அழகரின் சௌலப்யத்தை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தார்..

...சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால், திருமாலையாண்டான் பரமபதித்ததும், 
அவருக்கான இறுதிக் காரியங்களை, 
அழகர் தமது பரிவாங்களைக் கொண்டு, அர்ச்சக பரிசாரக முகேன, இன்றளவும் செய்து வருகிறார்..

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் 
ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி...

அதனால்தான், அழகர் வருஷாவருஷம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய்க் குளியல் கண்டருளுகிறார்..

அழகர் வருஷத்தில் ஒரு முறை நூபுரகங்கைக்கு வருகை தருவார்..

ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான, திருமாலையாண்டான் பரமபதித்த நாள்..

கலியுகத்தில் பகவான் மனுஷ ரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது!..

எனவே, அபிமானிகளே!.. ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால், அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்...
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்...

அழகர் திருவடிகளே சரணம் சரணம் !!🙏🙏🙏