OUR PUBLICATIONS

ஆலயதரிசனம் பதிப்பகத்தின் வெளியீடுகள்  :

அன்பார்ந்த வாசகர்களே ! எங்கள் பதிப்பகத்தின் பல்வேறு வெளியீடுகளின் விபரங்களை  இங்கு கொடுத்துள்ளோம். புத்தங்கங்களை பெற விரும்புவோர் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

Online இல் ஆர்டர் செய்து பெற  http://aalayadharisanam.com/shop/
Online இல் ஆர்டர் செய்து பெற https://www.payumoney.com/store/buy/adpathipagam

ஸ்ரீ இராமனின்  குணங்கள் - ரூ. 50/-

இராமாயணத்தின் செய்திகளை - இராமனின் சீரிய குணங்களை எத்தனையோ நூல்களில் படித்திருக்
கிறோம். எத்தனையோ சொற்பொழிவுகளில் கேட்டிருக் கிறோம். 
பத்மஸ்ரீ. ஸ்ரீமாந். டி.கே.எஸ். அவர்கள் புராணமோ, இதிகாசமோ, வேதமோ எதையும் நடைமுறை வாழ்க்கை யோடு இணைத்துப் பார்ப்பவர்.
அதே போல் ராமனின் 16 வகையான குணங்களைப் பற்றி இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து எழுதிய நூல்.
அதுமட்டுமின்றி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணமும் இந்நூலின் கடைசிப் பகுதியில் உள்ளது.

இலக்கிய  நோக்கில்  திருப்பாவை     - ரூ. 80/-

ஐந்து முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட அருமையான நூல்.
1.திருப்பாவையைப் பற்றிய ஆய்வினை புதுக் கோணத்தில் எடுத்துச் செல்லும் ஆய்வுக் கட்டுரை.
2.ஆஹார நியமம் - உணவானது ஒரு மனிதனின் குணத்
தையும் நடத்தையும் எப்படி உருவாக்குகிறது என்பதை விளக்குகிறது.
3.ஆழ்வார்கள் பாசுரங்கள் காட்டும் மலர்வழிபாடு.  மலர் வழிபாட்டின் சிறப்பு, மலர்களின் வகைகள், ஒவ்வொரு மலருக்கும் என்ன சிறப்பு? என்பதை விளக்குகிறது.
4. வைணவ மரபு, பரிபாஷை பற்றிய அறிமுகம்!
5.விலக்ஷண மோட்ச அதிகாரி நிர்ணயம் என்ற நூலுக் கான அணிந்துரை  என பல அரிய தகவல்களின் தொகுப்பு. 

கருடபுராண சாரம்  - ரூ. 60/- 

ஒவ்வொரு உயிரினங்களும் தோன்றுவதற்கு முன்னும், மறைந்ததற்குப் பின்னும் அதன் நிலை என்ன என்ற கேள்வியாக எழுகிறது.
அந்த விஷயத்திற்கென்றே ஓர் உன்னதமான புராணம் தான் கருட புராணம். கருட பகவானுக்குப் பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனே சூட்சுமமான பல விஷயங்களை இந்தப் புராணத்தில் சொல்லுகிறார்.
மிகப்பெரிய புராணமான கருட புராணத்தின் சாரமான விஷயங்களை எளிமையாகத் தொகுத்து பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த நூல் தான் இது. கருடபுராணத்தை எப்போது படிக்க வேண்டும்? - மறுபிறவிபிறவியும் காரணங் களும் - சுவர்க்கம் அடைய வழி என்ன - புத்திரப்பேறு - பாவ ங்கள் எவை? எவை? - பரிகாரமில்லாத பாவங்கள் -இறந் தவுடன் ஜீவன் அடையும் நிலைகள் -  என பல விஷயங்களை கொண்டது இந்நூல்.

யார் ஸ்ரீ வைஷ்ணவன் - ரூ. 40/- 

இந்த கேள்விக்கு என்ன விடை? மிக அழகாக விளக்குகிறார் நங்கநல்லூர் ஸ்ரீ சுதர்சனன். மிக எளிதாக வைணவத்தத்துவங்களை எல்லாருக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறார்.
வைணவர்கள் தெரிந்து கொண்டு சிந்திக்க வேண்டிய ஏராளமான கருத்துக்கள் இந்த நூலில் இருக்கின்றன.
இவ்வுலகம் முழுமையும் விஷ்ணுவால் படைக்கப் பட்டு காக்கப்பட்டு, அழிக்கப்பட்டும் வருவதால் இவ்வுலகு முழுமையும் வைஷ்ணவமானது என்றும், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் விஷ்ணுவையே அந்தர்யா மியாய்க் கொண்டு அவனுக்கே உடலாய் நிற்பதால் அனைவரும் விஷ்ணு ஸம்பந்திகளான ஸ்ரீவைஷ்ணவர்களே என்றும் நிரூபிப்பதே இந்நூலின்  கருத்தாம்.

பகவானின் திருநாம வைபவம்  - ரூ. 50/-

கலிகாலத்தில் பகவானை மிக எளிதாக பக்தி செய்யும் வழி அவனுடைய திருநாமங்களை வாயாரப்பாடி, மனதார நினைப்பது தான் ... 
பகவானைவிட பகவானின் திருநாமம் ஒருபடி மேலானது என்பது நம் ஆன்றோர்களின் நிலை...
பகவான் கைவிட்டாலும், அவன் திருநாம ஸ்மரணமானது நம்மைக்  கைவிடாது, நம் பாபங்களை அழி
த்து, காப்பாற்றி, நிறைவாக மோட்சம் என்னும் பேரின்ப நிலையையும் தரும் என்பதை அழகாக விவரிக்கும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கான விளக்கம் தான் இந்த பகவானின் திருநாம வைபவம்.

ஸ்ரீ வசனபூஷணம் - ரூ. 180/-

பிள்ளை லோகாச்சாரியர் இயற்றிய ரகஸ்ய நூல்களில் ஒன்று ஸ்ரீ வசனபூஷணம்.
இராமாயணத்திலிருந்தும் மஹாபாரதத்திலிருந்தும் எடுத்தாளப்பட்ட விநோதங்கள்! இந்த சூத்திரங்களில் கையாளப்பட்ட, ஒப்புவமையற்ற உவமைகள்! இவற்றை
யெல்லாம், இக்கால வைணவத் தலைமுறையினர் நன்கு தெரிந்து கொண்டு, இந்த வைணவப் பிறவியைக் கொண்டு, இனியும் பிறக்காத பேறு பெற்று, பகவானின் திருவடிகளை அடைந்து, அவனுக்குத் தொண்டு செய்யவே இந்த ஜீவன் என்பதை உணர வேண்டும் என்பதற்கான சிறிய முயற்சியே ஸ்ரீவசனபூஷணம்.


கடலூர் மாவட்டம்  (திருக்கோயில்கள் ஸ்பெஷல்) - ரூ. 50/-

கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோ வில்கள்.
சிதம்பரம் நடராஜர் - தில்லை கோவிந்தராஜப் பெருமாள் - திருப்பா திரிப்புலியூர் - திருவகீந்திரபுரம் - திருவாமூர் - கொளஞ்சியப்பர் - விருத்தகிரீஸ்வரர் - திருமுட்டம் -  புவனகிரி -  திருவேட்களம் - பெண்ணாடம் - வளைய மாதேவி - காட்டுமன்னார்கோயில் -  பொல்லா பிள்ளை யார்கோயில் - வடலூர் - அனந்தீஸ் வரன் கோயில் ... என பல கோவில்களின் சிறப்புகள், ஸ்தல வரலாறு, திருவிழாக்கள், போன்ற அறிய தகவல்கள் படங்களுடன்.


வாழ்க்கை  வாழ்வதற்கே.... - ரூ. 70/-

ஆசிரியர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு புத்தகங்களில், முகநூலில், இணையத்தில் படித்து ரசித்து உணர்ந்த வைர வரிகளை இங்கு நமக்காக தொகுத்தளித் திருக்கிறார்.
நம் சிந்தனை களுக்கு ஒளியூட்டும் நூற்றுக் கனக்கான சின்னச்சின்ன விஷயங்களை கொண்டுள்ளது இப்புத்தகம். 
குறிப்பாக, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்நூல் முன்னேறுவதற்கு ஒரு சிறந்த  வழிகாட்டி.
படிக்கும் மாணவர்களுக்கு பரிசாக அளிக்க ஒரு நல்ல நூல்.

வாழத்தொடங்குவோம் வாரீர்...  - ரூ. 40/-

நாடகப் பேராசிரியர். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ்நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்சு என்ற நூலில் இருந்தும் மற்றும் பல முக்கிய நூல்களில் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள விஷயங்களை மட்டும் எடுத்து தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
காப்பி, டீ அருந்துதல் முதல் உறக்கம் வரை அனைத்தும் பின்பற்றக்கூடிய எளிமையான  முக்கிய குறிப்புக்கள்.
இதில் உள்ள பல குறிப்புக்கள் பின்பற்ற எளிமை யானவை என்பது இந்நூலின் சிறப்பு.
குறுகிய காலங்களிளேயே பல ஆயிரம் பிரதிகள் விற்ற புத்தகம் இந்த அருமையான புத்தகம். 

ஆனந்தரங்கம் பிள்ளை  நாட்குறிப்பு  - ரூ. 150/-

ஆனந்தரங்கம்பிள்ளை - புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியா ளர்களுக்கு (துபாஷ்) மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்.
அக்கால சரித்திர வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வு களையும் தன் பார்வையில் நாட் குறிப்புகளாக எழுதியவர்.
இவர் நாட்குறிப்புகள் மூலம் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு.
இது ஆனந்தரங்கம்பிள்ளை பற்றிய விபரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.. பல சிறப்புக்களை உரக்கச் சொல்லும்
உன்னத ஆவணம். புதுச்சேரி வானொலிலையத்தின் மூலம் 13 வாரங்கள் ஒலி உலா வந்து பலரையும் மயங்க வைத்த உரைச்சித்திரத்தின் உன்னதத் தொகுப்பு.. இதில் தான் எத்தனை எத்தனை சுவையான விபரங்கள்....

உலகம் பிறந்தது உனக்காக    - ரூ. 60/-

உலகம் பிறந்தது உனக்காக என்ற இந்த நூல் முன்னேறத்துடிப்பவர்களின் மூலதனம்.
ஆம், வாழ்வில் முன்னேற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்
காக உருவாக்கப்பட்ட நூல்.
அளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு, நேர்மையான பாதை.... வெற்றி கிட்டாமலா போய்
விடும்? என்ற டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் வரிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்காக எழுதப்பட்ட நூல். 
குறிப்பாக முன்னேறத் துடிக்கும் தொழில் முனைவோருக்கும் , இளைஞர்களுக்கும் அன்புப் பரிசளிக்க ஒரு நல்ல பரிசு இப்புத்தகம்.

ஸ்ரீ ராமாநுஜரின் 9 நூல்கள்
ஒரு அறிமுகம்  - ரூ. 150/-

இராமாநுஜரின் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குக்கூட அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்திருக்க வில்லை.
அவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை நமக்காக அருளிச் செய்திருக்கிறார். அவை ஒவ்வொன்றும் நன்முத்துக்கள். விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள். 1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.
வடமொழியில் அமைந்த இந்நூல்களின் சாரமான செய்திகளை நாம் அறிய நமக்காகத் தந்திருக்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும் வைணவ அறிஞருமான முனைவர் ஸ்ரீ அ.வே.ரங்காச்சாரியர் ஸ்வாமி. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல்.

சங்கத்தமிழ்மாலை   - ரூ. 100/-

இந்நூல் சங்கத் தமிழையும் ஆண்டாளின் திருப்பாவை யையும் ஆராயும் திருமதி.வி.ஆர்.கோமதி அவர்களின் திறனாய்வு நூல் ஆகும்.
ஆண்டாள் அருளிய சங்கத்தமிழ் மாலையான திருப்பா வையை இலக்கியக் கண்ணோடும் இறை உணர்வுடனும் சிறப்பாக, இதுவரையில் யாரும் செய்யாத வகையில் முழுமை யாக ஆய்வு செய்துள்ளார் இந்நூலாசிரியர்.
திருப்பாவையை முழுமையாக ஆராய்ந்து, ஒப்பீடு செய்து, தொல்காப்பியம், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் முதலிய நூல்களைப் படித்துத் தன் பரந்த அறிவு, ஆழ்ந்த புலமை, நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் திருப்பாவையின் உள்ளுரைக் கூறுகளை வெளிக் கொணர்ந்து காட்டியுள்ளார் ஆசிரியர். இது வரை வராத சிறந்த ஆய்வு நூல். 

இராமாநுஜரின்  அவதார   வைபவம்   - ரூ. 80/-

சித்ரகூடம் ஸ்ரீ ஏ.வி.ஆர் ஸ்வாமிகள் ஸ்ரீ ராமாநுஜரைப் பன்முகப் பரிமாணத்தில் பார்த்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஸ்ரீ ராமாநுஜரின் அவதார வைபவம் என்கிற தலைப்பில் இந்நூல் வெளியிடப்படுகின்றது. 
ஸ்வாமியின் ஆழ்ந்து அகன்ற வைணவ ஞானமும், ஆராய்ச்சி நோக்கும் இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ராமாநுஜர் தமிழ்மொழிக்கு எதுவும் செய்யவில்லையே? அவர் வடமொழியில் தானே ஒன்பது நூல்களையும் எழுதினார் என்று கேட்கின்றவர்களுக்குப் பதிலாக முத்தமிழ் வளர்த்த ராமாநுஜர் என்கிற கட்டுரையில் ராமாநுஜரின் தமிழ்ப் புலமை, தமிழை வளர்த்த வரலாறு, தமிழ் உரைவளத்திற்கு அவர் செய்த தொண்டு ஆகிய விவரங்கள் மிக அருமையாகக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இப்படி பல ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஆழ்வார்கள்  தந்த  அருந்தமிழ்   - ரூ. 110/-

ஆலய தரிசனம் ஆசிரியரால் இயற்றப்பட்ட ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் என்ற இந்நூல் இப்போது  நான்காம் பதிப்பாக வெளியாகிறது.
ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் அருமையான தமிழ் மட்டுமல்ல; நாம் அருந்தி மகிழும்படியாக அமுதத் தமிழ்!புனிதத் தமிழ், தேன் தமிழ், தெய்வத்தமிழ், மதுரத்தமிழ், நறுந்தமிழ், பக்தித்தமிழ், சங்கத்தமிழ், இன்பத்தமிழ், இசைத்தமிழ் என்று பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு ஆழ்வாரின் பாசுரத் தொகுப்பிலிருந்து ஒரே ஒரு பாசுரத்தை எடுத்து தனக்கே உரிய பாணியில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
ஒரு பாசுரத்தை எப்படிச் சுவைக்கலாம் - ஆராயலாம் - உணரலாம் - எனும் நுட்பத்தை இந்த நூல் காட்டுகிறது.


ஜோதிடமும் பரிகாரமும்   - ரூ. 50/-

ஜோதிட சாத்திரத்தை இப்படி அலசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூலை பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஜோதிடர்கள், சோதிடம் கற்போர், பொதுமக்கள் என அனைவரும் சிந்திக்க வேண்டிய அரிய ஆய்வுக்கருத்துக்கள்.
ஒன்று நடந்த பிறகு இது இன்னின்ன காரணத்தினால் நடந்தது என்று சொல்லலாமே தவிர,  நடப்பதற்கு முன்னால் சொல்வதற்கு இயலாது.காரணம், அது அப்படித்தான் நடந்தாக வேண்டும்.
அப்படியானால், திருமணத்திற்கு ஜாதகம் சேர்ப்பதை எப்படி அணுகுவது என்ற கேள்வி எழும். 38 வருட தொடர் ஜோதிட ஆய்வின் பயனே இந்நூல். படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள். 

ஸ்ரீ மணவாள மாமுனிகள் (வாழ்க்கை வரலாறு நாடக வடிவில்)
- ரூ. 90/-

சுவாமி மணவாள மாமுனிகள் இராமாநுஜரின் மறு அவதாரம்.
வைணவத் தென்கலை வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சாரியர்.
திருவாய்மொழியை உரையோடு நாடெங்கும் பரப்பியவர். இப்படிப்பட்ட மகானின் வரலாற்றை சிறுவர்களும் படித்துணரும் வண்ணம் நாடகமாக எழுதப்பெற்ற அற்புதமான நூல்.
இது வரை வேறு எதிலும் வராத மாமுனிகளின் அவதார ஜாதகக்குறிப்பு இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.
பள்ளிகளில் மாணவர்களும் பெரியவர்களும் நாடகமாக நடிக்கலாம்.

இராமாயணம்  வினா - விடை  - ரூ. 50/-

மதுராந்தகம். ஸ்ரீ எஸ் ரகுவீரப்பட்டாச்சாரியர் இராமாயணத் திலிருந்து பல சம்பவங்களை கேள்வி பதில்களாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக ரிஷிய சிருங்கரின் மனைவி பெயரும் வாமதேவர் யார் என்பதும் சாதாரணமாக இராமாயணம் படித்தவர் களுக்கே தெரியாது.
வெள்ளம் என்று படைகளின் வலிமையைச் சொல்கிறோம். ஒரு வெள்ளம் என்பது எவ்வளவு படை வீரர்கள்.?
இப்படி எண்ணற்ற நாம் அதிகம் அறிந்திராத சுவையான செய்திகளை கேள்வி பதில் வடிவில் காணலாம். அருமையான நூல்.

சுகம் தரும்  சுந்தர காண்டம்    - ரூ. 60/-

சுகம் தரும் சுந்தரகாண்டம் என்கிற இந்நூல் வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப ராமாயணத்தை ஆராய்ந்து சுந்தர காண்டத்தில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றையும் விட்டு விடாது எளிய தமிழில் தொகுத்து பாராயணம் செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்ட நூலாகும்.
இதில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்கின்ற முறை யையும், பாராயணத்தின் பலன்களையும் விரிவாகக் கொடுத்து ள்ளோம். கதை நிகழ்வுகளை சிறு குழந்தைகூட வாசிக்கும் எளிய நடையில் அமைத்திருக்கிறோம்.
சுந்தர காண்டத்தைப்பாராயணம் செய்வது மிகுந்த பலன் அளிப்பதாகும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எந்தக் கவலையாக இருந்தாலும் அது அகன்று விடும்.
வாசகர்கள் தாங்கள் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதோடு, தங்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்
களுக்கும் இந்நூலை வாங்கிக் கொடுத்துப் புண்ணியப் பயன்பெறுவீர். 


இராமாநுஜ  நூற்றந்தாதி  விளக்கவுரை   - ரூ. 150/-

காயத்திரி மந்திரத்திற்கு நிகராக ஸ்ரீ ராமாநுஜரின் புகழ்பாடும் உயர்ந்த நூல் இது.
திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இந்நூலை தினசரி பாராயணத்தில் பாடுகின்றனர். இதன் பொருட்சிறப்பு அற்புதமானது. 
மணிப்பிரவாளத்தில் பிள்ளை லோகம் ஜீயர் செய்த உரையை மிக எளிய தமிழில் செய்திருக்கிறார் தமிழும் வைணவமும் நன்கு அறிந்த காரைக்கால். ஸ்ரீ அரங்கநாதாச் சாரியார் ஸ்வாமிகள். பதவுரை, தெளிவுரை சிறப்புரை விளக்கவுரை என வரைந்திருக்கிறார். 
படிக்கப் படிக்க ஆனந்தம் தரும் அருமையான நூல்.

திருக்குறளும்  கீதையும்   - ரூ. 150/-

எக்காலத்திற்கும் எச்சூழலுக்கும் எவர்க்கும் பொருத்தமுடைய நூல் திருக்குறள்.
இரண்டே வரிகளில் அழுத்தமாகத் தெளிவான கருத்துக்களை முன்வைப்பது போலவே ஸ்ரீமத் பகவத்கீதையும் அற்புமான கருத்துக்களை முன் வைக்கிறது.
இரண்டு நூல்களையும் படிக்காமலேயே இது உயர்வான நூல். இது தாழ்வான நூல் என்று கருத்து கூறுபவர்களுக்காகவும் இரண்டு நூல்களின் சாரமான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் எழுதப்பட்ட அருமையான ஒப்பீட்டு ஆய்வு நூல்.
ஆலய தரிசனத்தில் மாத இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்ற நூல். 

பன்னிரு  ஆழ்வார்களின் கதைகள்  - ரூ. 50/-

பகவானின் எல்லையற்ற கல்யாண குணங்களில் ஆழ்ந்து போய் தமிழிலே பாசுரம் பாடிய மகான்களையே ஆழ்வார்கள் என்கிறோம்.
வருண பேதமின்றி எல்லாக் குலத்திலும் பிறந்த ஆழ்வார்கள் பக்தி ஒன்றினாலேயே பகவானை அடைந் தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் தான் எத்தனை சுவாரஸ்யம்? ஆழ்வார்களின் கதைகளை அறிவதன் மூலம் பக்தியை அறிகிறோம், பரந்தாமனை அறிகிறோம், தமிழை அறிகிறோம்.
இப்புத்தகம் ஆழ்வார்களின் அவதாரம் முதல் திருவரசு (பரம பதம் அடைதல்) வரை அனைத்து முக்கியமான விபரங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைந் திருக்கிறது. 


திருப்பாவை  விளக்கவுரை  - ரூ. 120/-

திருப்பாவைக்கு மிக விரிவாகவும் இல்லாமல் மிக சுருக்கமாகவும் இல்லாமல் உரை விளக்கம் தந்திருக்கிறார் திருச்சித்ரகூடம் ஸ்ரீ ஏ வி. ஆர் ஸ்வாமி.
மரபு மாறாத விளக்கங்கள். ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்து பாசுரங்களிலும் எந்த எந்த ஆழ்வார்கள் துயில் எழுப்பப்படுகிறார்கள் என்கிற நுட்பமான குறிப்புகள் உண்டு.
வெளிப்படையான பொருள் மட்டும் இன்றி உள்ளுறைப்பொருளும் தரப்பட்டிருக்கின்றன.

பலன் தரும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் - ரூ. 25/-

மனிதனான பீஷ்மர் பகவானை எதிரிலே உட்கார வைத்துச் சொன்ன உயர்ந்த நூல்.
தினமும் இதைப் பாராயனம் செய்வதால் மனது சாந்தமாகி நேர்மறை எண்ணங்கள் உதயமாகும்.எல்லாத் தடைகளும் நீங்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
எந்தக் கெட்ட எண்ணங்களோ சக்தியோ நெருங்காது. இறப்புக்குப்பின் மோட்சம் தரும் சக்தி உண்டு.
வடமொழியில் அமைந்திருந்தாலும் பாராயணத்தைப் பிழையின்றிச் செய்ய பதம் பிரித்து அளித்துள்ளோம்.
மற்றவர்களுக்கும் வாங்கித்தந்து பாராயணம் செய்ய வைக்கலாம்.
இப்புத்தகத்தில் பாராயண முறைகள், விளக்கங்கள், 1000 நாமங்கள், மந்திர பாராயண பலன்களுடன் பெரிய எழுத்தில் பதிப்பித்துள்ளோம்.


அமாவாசை தர்ப்பணம் - ரூ. 25/-

ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாதப்பிறப்பன்றும் கிரகணம் முதலிய காலங்களிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்று தர்ப்பணம் செய்யாதவர்கள் பலர். சரியாகச் செய்யாதவர்கள் பலர்.செய்வதற்கு வாத்தியார் இல்லாத நிலையும் உண்டு.
இந்த அவசர காலக்கட்டத்தில் இந்தப்புத்தகத்தை வைத்துக்கொண்டு மிக எளிதாக நீங்கள் தர்ப்பணம் செய்ய லாம். தவறின்றிச் செய்யலாம். தவறின்றிச் செய்கிறார்களா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
அமாவாசையின் சிறப்பு - மகாளய அமாவாசை - அமாவாசையில் சுப காரியம் - தர்ப்பணம் எப்போது கொடுப்பது? - தர்ப்பணம் செய்வது எப்படி? - அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் முதல் யதாஸ்தானம் வரை பல முக்கியமான விஷயங்கள் இந்நூலில் அமைந்திருக்கின்றன.

No comments:

Post a Comment