Saturday, March 19, 2016

அச்சு


  தலைப்பு இல்லாவிட்டாலும் தலைப்பை ஏற்படுத்திப் பேசுபவர்கள் உண்டு.
    தலைப்பு கிடைத்தாலும் தான்பாட்டுக்கு பேசுபவர்கள் உண்டு.
    ஓர் திறமையான இசைஅரங்கு . இசைவாணர் பாடிக் கொண்டிருந்தார் . நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பக்க வாத்தியத்திற்கு உள்ளூரில் உள்ள ஒரு பையனை ஏற்பாடு செய்திருந்தனர் .
    கச்சேரி முடிந்தபிறகு கேட்டனர்.
    ‘பையன் எப்படி?உங்கள் பாட்டுக்கு வாசிச்சாரா ?
     பாடகர் சொன்னார். என் பாட்டுக்கு வாசிக்கவில்லை. தன் பாட்டுக்கு வாசிச்சார்!.
    தலைப்பு கொடுத்துவிட்டு இன்ன தலைப்பில் பேகிறேன் என்று அறிவித்து தன் பாட்டுக்கு பேசுவர்கள் உண்டு. அவர்கள் தான் இன்று அதிகம்.
    அடியேனுக்கு அந்தத் துணிச்சல் இல்லை.
    எனவே தலைப்பைக் கேட்டேன்.
    தலைப்பு வேண்டுமா என்றார் ஆலி நாடன் ஸ்வாமி.
    ஆம். ஏதேனும் ஓர் மையம் - அச்சு - இருந்தால்தான் அதனை ஒட்டி பேச்சைச் சுழற்ற முடியும் என்றேன்.
    உடனே பிடித்துக்கொண்டார்.
   "அச்சு"   என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமே என்றார்.
    வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பது இதுதான்.
    நான் பாட்டுக்கும் திருநகரி மகாத்மியம் அல்லது திருமங்கை ஆழ்வார் வாழ்வும் வாக்கும் என்று பேசிவிட்டுப் போகலாம்.
    இப்போது தலைப்பு ’அச்சு’ ன்று ஆகி நச் என்று என்னை நசுக்கிவிட்டது.
        .....    .....    .....    .....    .....
    அச்சு என்றால் ஓர் மையம்.உருளை. இப்படி பல பொருள்.
    சக்கரத்திற்கு நடுவில் சக்கரம் சுற்றுவதற்கு ஆதாரமாக விளங்கு
வது அச்சாணி.
    எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நாம் நித்தியம் சொல்லும் ஸ்லோகம். வைணவ குரு பரம்பரைக்கு அச்சாணி.
    என்ன ஸ்லோகம்?
    லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
    அஸ்மதாசாரிய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.
    முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள் அப்புறம் ஆளவந்தார்....
    நமது ஆசாரிய குலதிலகமான ஸ்வாமி நாதமுனிகள் வைணவ மரபுக்கு மையம் அல்லவா!
    கூரத்தாழ்வானின் ஞான தீட்சண்யம் அறிவுத்திறன் இந்த சுலோகத்தில்  வியக்கவைக்கும்.
    ஒரு ஸ்லோகம் எழுதினால், அதன் அர்த்தம் எத்தனை யுகங்களா
னாலும் பொருந்தி நிற்க வேண்டும்.
    இந்தச் சுலோகம் அப்படிப்பட்டது.
    லக்ஷ்மி நாதன்.  பகவானுக்கு ஸ்ரீநிவாஸன் என்று பெயர். திருமகள் நாதன். திருமால்.வெறும் மால் அல்ல.ஸ்ரீமந் நாராயணன்.
    நம் ஸம்பிரதாயத்தின் உயர்வு அப்படிப்பட்டது.
    நான் அலங்காரமாகப் பேசுபவன் அல்ல, நுட்பமாகப் பேசுபவன் அல்ல.  உள்ளது உள்ளபடி, உணர்ந்தது உணர்ந்தபடியும் உரைப்பவன்.
    இதிலே ஆசார்யன் பெருமை பேசப்படுகிறது.
    சிஷ்யன் பெருமை பேசப்படுகிறது.
    பிராட்டி பெருமை பேசப்படுகிறது.
    பகவான் பெருமை பேசப்படுகிறது.
    நாதயாமுனி மத்யமாம் இது தான் அச்சு.
    ஆசார்யரான நாதமுனிகளை அச்சாகக் கொண்டு ஸ்ரீவைஷ்வை சமயம் என்னும் சக்கரம் சுழல்கின்றது.
    நாதமுனி என்பது அவர் திருநாமம். அப்படி என்ன காரியம் செய்தார் என்று தோன்றும்.
    ஒருவருக்கு இருதயநோய். அடைப்பு வந்து விட்டது. பிழைப்
பாரா பிழைக்க மாட்டாரா என்பது தெரியாத நிலையில் ஓர் மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
    டாக்டர் அருமையான டாக்டர்.
    தன் அபாரத் திறமை அத்தனையையும் பயன்படுத்துகிறார். சளைக்காமல் முயற்சி செய்கிறார்.  ஆபத்தான நோயாளியைக் காப்பாற்றி விடுகிறார்.
    ஸ்வாமி நாதமுனிகள் தான் அந்த டாக்டர்.
    வந்த நோயாளி போல்தான் ஸ்ரீவைஷ்ணவ சமயம் அன்றைக்கு இருந்தது.
    நின்று போன சக்கரத்தைச் சுழலவிட்டவர் நாதமுனிகள்.
    காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்கு
    தாளம் வழங்கி தமிழ் மறையின் இன்னிசை தந்த வள்ளல் நாதமுனிகள். எனவே முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள்.
        ......    .....    .....    .....    .....
    ஆனால் அந்த அச்சு (ஸ்வாமி நாதமுனிகள்) சுழல்வதற்கு அவ
ருக்கு ஒரு அச்சு தேவைப்பட்டது. அந்த அச்சுதான் கண்ணிநுண் சிறுத்
தாம்பு.
    திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாரின் பிரபந்தத்தைப் பிரகாசப்
படுத்தினார்.
    ஆனால் நாதமுனிகள் காலத்தில் பிரபந்தம் மறைந்திருந்தது. எப்படிப் பிரகாசப்படுத்தினார்? அதற்கு ஒரு அச்சு குடந்தைப் பாசுரம்.
    ‘ஆரா அமுதே‘  அழகான தமிழ்ச்சொல்.
    வடநாட்டிலே லோகசாரங்கர் என்றொரு முனிவர். வடநாடு வந்த ஒரு தேசாந்திரியிடம் கேட்டார்.
    தெற்கேயிருந்து அதாவது தமிழ்நாட்டிலே இருந்து வருகிறீர்களா என்ன விசேஷம் என்று.
    அவர் சொன்னார்.
" ஒரு விசேஷம் உண்டு. திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் ஏகமான புகழொடு பிரச்சாரமாகிறது...
    இதில் ஒரு பாட்டு சொல்லணும்!"
   "பாட்டு தெரியாது. ஆரம்பிக்கிற முதல் வார்த்தை அடிக்கடி காதில்விழும்!"
    "சொல்லும்!"
   "ஆராஅமுதே"  என்று அழகாகச் சொன்னார்.
    லோகஸாரங்கமுனிவர் துள்ளிக் குதித்து எழுந்தார். ஆஹா அபாரம்! ஆரா அமுது என்றால் ஆறிய அமுதும் உண்டோ! என்ன அற்புதம்!  என்ன அற்புதம்!
    அடியைப்பிடி என்பது போல அவருக்கு ஓர் அச்சு கிடைத்தது. பிடித்துக் கொண்டார். திருவாய்மொழியைத் தேடி தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். !
    அச்சு பிடிப்பவரையும் தன் புள்ளிக்கு இழுக்கும்.
    அப்படித்தான் நாதமுனிகளை ஆரா அமுதே இழுத்தது.
    விறுவிறுவென்று விசாரித்துக் கொண்டு திருக்குருகூர் அதாவது ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிட்டார்.


    போலீஸ்காரர்கள் ஒரு துப்புகிடைத்தால் முழு வழக்கையும் விசாரித்து விடுவார்கள்.
    நாதமுனிகள் ஓர் ஆரத்தைப் பிடித்துக் கொண்டு மையப் புள்ளியை நோக்கி நடந்தார். அங்கே பராங்குசதாஸர் என்றொரு அடியவர். நம்மாழ்
வாரின் சீடரான மதுரகவியாழ்வார் குலத்தில் வந்தவர்.
    அவரிடம் விசாரிக்கிறார்.
    அவர் எனக்குத் தெரியவில்லை அனால் ஒரு விஷயம். எங்களுக்கு. மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு தெரியும். அதைப் பன்னீராயிரம் முறை பாராயணம் செய்தால் ஆழ்வார் தோன்று
வார் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்றார்
    நாதமுனிகள் ஊன் உறக்கமின்றி தமிழ்வேதத்தை மீட்டெடுக்க பன்னீராயிரம் முறை தவம் செய்தார்.
    சீடரைப்பிடித்தால் குருவைப்பிடிக்கலாம்.
    நாலாயிரப் பிரபந்தத்தின் அச்சு கண்ணிநுண் சிறுத்தாம்பு. நாதமுனிகள் பாடினார். குரு கிடைக்கிறாரா?    
                                                                                                                        - தொடரும்

No comments:

Post a Comment